இதன்பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
* பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசி போக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம்.
* பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம்.
* இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.
* திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர்.
* காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது.
* ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் நலமான, வளமான, அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்.
* காலை உணவு திட்டம் பெற்றோருக்கான சுமையை குறைத்து பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
* அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது
* நாம் தொடங்கிய காலை உணவு திட்டம் கனடா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளது.
* மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பதே தி.மு.க.வின் பணி.
* பொய் செய்திகளை உருவாக்கி குளிர்காய நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது.
* ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்கள் நம்மை பாராட்டமாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.